Connect with us

சுகாதாரத்துறையில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக வெற்றி நடைபோடுகிறது – அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Featured

சுகாதாரத்துறையில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக வெற்றி நடைபோடுகிறது – அமைச்சர் உதயநிதி பெருமிதம்

சுகாதாரத்துறையில் தமிழகம் நம்பர் 1-ல் வெற்றிநடை போட்டு வருவதாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ அறைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை இன்று திறந்து வைத்தோம்.

மகப்பேறு மருத்துவ சேவைகளுக்கான PICME 3.0 மென்பொருள் – அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு கால இறப்புகளை தடுக்க உதவிடும் உபகரணங்கள் – அவசர கால மகப்பேறு & குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு தேவையான கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தோம்.

மகப்பேறியல் துறையில் சிறப்பு பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் – சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் என அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனி ஆளாக போராடிய ருதுராஜ் - பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top