Connect with us

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா..?

Featured

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா..?

உலகவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது . அதில் இந்தியா பிடித்திருக்கும் இடம் சற்று வியப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகிறது .

இதில் 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது

அந்தவகையில் இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா பிடித்துள்ளது

90 புள்ளிகளுடன் டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்திலும் உள்ளன.

நாளுக்கு நாள் ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கபட்டு வருகின்றன.

இதோடு நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதில் மொத்தம் சுமார் 180 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பையின் ரன்குவிப்பை முடக்குமா லக்னோ - டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top