Connect with us

‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள்..!!!

Cinema News

‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள்..!!!

மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெய்பீம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் த.செ.ஞானவேல் . பட்டி தொட்டி எங்கும் நல்ல பெயர் வாங்கிய இந்த படம் பல விருதுகளையும் வென்றது.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன் . திட்ட தட்ட முடியும் தருவாயில் இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் அனைவரும் செம ஆவலாக உள்ளனர்.

இப்படி இருக்கும் சூழலில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top