Connect with us

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவங்க சண்டை முடியாது போலயே – மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா – விஷ்ணு – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவங்க சண்டை முடியாது போலயே – மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா – விஷ்ணு – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டு ப்ரோமோக்களும் தாறுமாறாக அமைந்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் இன்று பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் ஆரம்பித்து வைத்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அதில் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் தாங்களாகவே வெளியேறி விடுவார் என்பதும் தெரிந்ததே.

அந்தவகையில் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இது ஒரு ஒரு புறம் இருக்க பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களிம் பேசும் பிக் பாஸ் இந்த சீசன் முழுவதும் யார் உங்களை யூஸ் செய்து விளையாடினார் என்பதை சொல்லுபடி கூற . பூர்ணிமா விஷ்ணுவை சொல்லி கிழித்தெடுக்கிறார் . இதனை கண்டு செம கோபமடைந்த மாயா விஷ்ணுவை திட்ட இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போக ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இந்த ப்ரோமோவை பார்க்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவங்க சண்டை முடியவே முடியாது என்பது போல் தெரிகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top