Connect with us

ஆப்கானிஸ்தான் நிதான ஆட்டம் – இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு..!!

Featured

ஆப்கானிஸ்தான் நிதான ஆட்டம் – இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் கடந்த 11 ஆம் தேதி நடை பெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று உலக புகழ் பெற்ற இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது .

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் களமிறங்கினர் இதில் சிறப்பாக விளையாடிய குர்பாஸ் 14ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க 10 பந்துகளை சந்தித்த இப்ராகிம் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த அகமதுல்லா மற்றும் ரஹமத் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்து வந்த நபி சிறப்பாக விளையாடி 35 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் ஓரளவு நீதமாக ஆட ஆட்டம் கடைசி வரை சென்றது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்து . இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Featured

To Top