Connect with us

ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவை முழுவதும் துண்டிப்பு – கடும் அவதியில் பொதுமக்கள்

Featured

ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவை முழுவதும் துண்டிப்பு – கடும் அவதியில் பொதுமக்கள்

ஹரியானா மாநிலத்தில் உள்ள 7 முக்கிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்ரபை ஏற்ப்படுத்தி உள்ளது.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக ஹரியானா விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்துக்காக ஆள் திரட்டும் வழியாக இணைய சேவை இருக்க கூடாது என்பதற்காக ஹரியானா மாநிலத்தில் உள்ள 7 முக்கிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் குறித்து வதந்தி பரவுவதை தடுக்க 13ஆம் தேதி வரை ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவையை துண்டித்துள்ளதாக அம்மாநில அரசு விளக்கமும் கொடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஏரளமான விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக கடுமையாக போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பள்ளி கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்கிடுக - ஜவாஹிருல்லா வேண்டுகோள்..!!

More in Featured

To Top