Connect with us

இறுதிவரை நீடித்த பரபரப்பு – ரஷீத்கானால் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..!!!

Featured

இறுதிவரை நீடித்த பரபரப்பு – ரஷீத்கானால் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி இதுவரை தோல்வியை சந்திக்காத ராஜஸ்தான் அணிக்கு தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் GT – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக இளம் புலி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் அணிக்கு தேவையான ரன்களை எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மறுபக்க ஆடிய பட்லரும் 8 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்ட அவருடன் சேர்ந்து ரியான் பராக்கும் வெளுத்துவங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இறுதி வரை களத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 196 ரன்களைச் குவித்தது . இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களத்தில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடி காட்டிய நிலையில் சிறப்பாக விளையாடி வந்த சாய் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதானமாக ஆட தவறி சொற்ப ரன்களில் வந்தவழி நோக்கி வேகமாக சென்றனர். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கில் அரை சதம் கடந்து அசத்தினார்.

ஆனால் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழக்க இறுதி நேரத்தில் வந்த ரஷித் கான் பவுண்டரிகளாக விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உருவெடுத்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ராஜஸ்தான் அணிக்கு தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது.

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top