Connect with us

விளம்பரத்துக்காக ஊர்களுக்கு ஏற்ற உடையை அணிந்து செல்லும் பிரதமர் மோடி – வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Featured

விளம்பரத்துக்காக ஊர்களுக்கு ஏற்ற உடையை அணிந்து செல்லும் பிரதமர் மோடி – வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

விளம்பரத்துக்காக அந்தந்த ஊர்களுக்கு தகுந்த உடையை அணிந்து செல்வதை மட்டுமே பிரதமர் மோடி சரியாக செய்து வருகிறார். ஆனால், அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்களின் பண்பாட்டையும் மதிப்பதில்லை என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வேலூரில் இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :

“இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா?

உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும்” என மத்திய அரசு கூறியது

நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் போதும் “வெளியுறவு கொள்கை” என்று மழுப்பலாக மத்திய அரசு பதிலளித்தது . இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்”

விளம்பரத்துக்காக அந்தந்த ஊர்களுக்கு தகுந்த உடையை அணிந்து செல்வதை மட்டுமே பிரதமர் மோடி சரியாக செய்து வருகிறார். ஆனால், அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்களின் பண்பாட்டையும் மதிப்பதில்லை

எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருக்கிறார். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் போது, பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும், அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார்

ஆனால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS MI : டெல்லியை அவர் இடத்தில் வைத்து வீழ்த்துமா மும்பை - டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top