Connect with us

“பிரதீப்பே இருந்திருக்கலாம் போலயே.. புலம்பும் மாயா..! இதுதான் காரணமா?!”

Bigg Boss Tamil Season 7

“பிரதீப்பே இருந்திருக்கலாம் போலயே.. புலம்பும் மாயா..! இதுதான் காரணமா?!”

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பால் பெண்களுக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டை சுமத்தி மாயா குரூப்பினர் சதி செய்து வெளியே தள்ளிவிட்டனர். பிரதீப் சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போது தற்போது பிரதீப் சென்றதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து பிரதீப்பே இருந்திருக்கலாம் என்று சொல்ல தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக வைல்ட் கார்டு போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் தினேஷ் கொடுக்கும் குடைச்சலை மாயா குரூப்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் மாயா, ஐஷு மற்றும் பிராவோ ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இவங்க கொடுக்கிற டார்ச்சருக்கு பதிலாக பிரதீப்பே இருந்திருக்கலாம், அவன் கொடுத்த டார்ச்சர் தாங்கிக் கொண்டு கூட கேம் விளையாடி இருக்கலாம், அவனும் நன்றாக விளையாடி இருப்பான், ஆனால் இவங்க விஷமா இருக்காங்க, தாங்கவே முடியவில்லை என்று தினேஷ் குறித்து மாயா கூறுகிறார்.

மொத்தத்தில் பிரதீப் இல்லாத குறையை தினேஷ் தீர்த்து வைப்பதால், தினேஷை எப்படி வெளியேற்றுவது என்று அடுத்த கட்டமாக மாயா குரூப் யோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மாயா குரூப்பினர் ஒவ்வொருவராக வெளியேறினால் தான் அவர்களுக்கு உண்மை தெரிய வரும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top