Connect with us

போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா! Maxwell-இன் தரமான சதம்..

Sports

போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா! Maxwell-இன் தரமான சதம்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார்…அனைவரும் எதிர்பார்த்தது இந்தியாவின் வெற்றியை…அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது…கண்டிப்பாக ஆஸ்திரேலியா இதை அடிக்கவே முடியாது என அனைவரும் நினைத்தனர்…

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அவரின் அபாரமான ஆட்டம் இந்திய அணிக்கு உதவி ஆகியது,சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தார்.திலக் வர்மா 31 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.

பின்னர் கடின இலக்கை அடிக்க வந்த ஆஸ்திரேலியாவுக்கு டிரேவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்…அணி ஒரு நல்ல இடத்திற்கு அந்த ரன்கள் எடுத்து சென்றது…இப்படி சென்ற ஆட்டத்தில் திடீரென விக்கெட்டுகள் விழ துவங்கியது..

கடைசி 12 பந்துகளில் ஆஸியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,19ஆவது ஓவரை அக்‌ஷர் படேல் வீசினார். அந்த ஓவரில் மட்டும் வேட் 17 ரன்கள் எடுத்தார்.அந்த ஓவரில் 4, 2, 2, நோபால் 6, 1, பைஸ் 4 என்று மொத்தமாக 22 ரன்கள் குவிக்கப்பட்டது…இப்படி அவர்களுக்கு சாதகமாக அமைந்தது…

அதனை போல கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது…20ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார்.முதல் பந்தில் வேட் பவுண்டரி, 2ஆது பந்தில் சிங்கிள் தட்டி விட்டு வந்தார்…இப்படி தான் ஆட்டம் இருந்தது…அதன்பின் கடைசியாக 4 பந்துகளில் 6, 4, 4, 4 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸும் அடிக்கவே ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது…

இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் 1 வெற்றியோடு இருக்கின்றது..நேற்று நடந்த ஆட்டத்தில் கிளென் maxwell ஆட்டம் மிகவும் சிறந்த முறையில் இருந்து மாஸ் காட்டியது..104 அடித்து இருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Sports

To Top