Connect with us

அதிரடி சதம் விளாசிய ருத்துராஜ் – ஆஸ்திரேலியா அணிக்கு 223 ரன்கள் இலக்கு..!!

Featured

அதிரடி சதம் விளாசிய ருத்துராஜ் – ஆஸ்திரேலியா அணிக்கு 223 ரன்கள் இலக்கு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 3 வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிராமாக ஆடி 222 ரன்கள் குவித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த 2 போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் களமிறங்கினர் . இதில் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 6 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க பின்னீர் கேப்டன் சூர்யா மற்றும் ருத்துராஜ் ஜோடி சேர்ந்தனர் .

பொறுப்புடன் விளையாடிய இருவரும் அணிக்கு தேவையான ரங்களை மளமளவென எடுத்தனர்.சிறப்பாக விளையாடிய கேப்டன் சூர்யாவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . ஆனால் இறுதிவரை களத்தில் நின்று விளையாடிய ருத்துராஜ் அதிரடி சதம் விளாசி எதிரணியை மிரளவைத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 222 ரன்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய ருத்துராஜ் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்து களத்தில் கெத்தாக இருந்தார். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 3 வது டி20 கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top