Connect with us

மீண்டும் மீண்டுமா : அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!

Featured

மீண்டும் மீண்டுமா : அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில பகுதிகளிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் இதனால் சென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top