Connect with us

மிக்ஜாம் புயல் பாதிப்பு – நிவாரண உதவிகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Featured

மிக்ஜாம் புயல் பாதிப்பு – நிவாரண உதவிகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் :

  • மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் . இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

  • சேதமடைந்த குடிசைகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 உயர்த்தி வழங்கப்படும்

  • மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 வழங்கப்படும்

  • உயிரிழந்த ஆடுகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி ரூ.3,000ல் இருந்து ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும்

  • சேதமடைந்த மானாவரி பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி ரூ.7,410ல் இருந்து ரூ.8,500ஆக உயர்த்தி வழங்கப்படும்

  • உயிரிழந்த எருது, பசு உள்ளிட்டவைகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூ.30,000ல் இருந்து ரூ.37,500 ஆக உயர்வு

  • முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கான மானிய தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு

  • சேதமடைந்த வலைகளுக்கான நிவாரண தொகை ரூ.10,000ல் இருந்து ரூ.15,000ஆக உயர்வு

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சாய் சுதர்சன் , கில் அதிரடி சதம் - சென்னை அணிக்கு 232 ரன்கள் இமாலய இலக்கு..!!

More in Featured

To Top