Connect with us

ஐசிசி வழங்கும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு 2 இந்திய முன்னாள் வீரர்கள் தேர்வு..!!

Featured

ஐசிசி வழங்கும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு 2 இந்திய முன்னாள் வீரர்கள் தேர்வு..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வரு ஆண்டும் ஐசிசி வழங்கும் மிக உயரிய விருதான ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இம்முறை இரண்டு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படும் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதுக்கு இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான விரேந்தர் சேவாக், டயானா எதுல்ஜி மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

உலகில் இருக்கும் பல விலையாட்களில் கால்பந்து விளையாட்டுக்கு பின் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் .

இந்நிலையில் இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கும் நிகழ்ச்சி ஐசிசி-யால் நடத்தப்பட்டு வருகிறது .

இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விரேந்தர் சேவாக், டயானா எதுல்ஜி ஆகியோர் விளையாடிய போட்டிகளில் தங்களது திறமைகளை பல முறை உலகிற்கு காட்டி பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர் .

பல சாதனைகளுக்கும் , பெருமைகளுக்கும் சொந்தக்காரர்களான இவர்களுக்கு இந்த ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்பட உள்ளதை அடுத்து இந்நாள் , முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் நடிகர் கார்த்தி..!! அப்போ அடுத்த வருடம் கார்த்தி வருடம் தான் போலயே…

More in Featured

To Top