Connect with us

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!!

Featured

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!!

கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல் அந்த சிறுமியை அஸ் பாக் ஆலமு என்ற காமக்கொடூரன் கொலை செய்தும் உள்ளான் .

இதையடுத்து அந்த கொடூரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . இந்நிலையில் குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது .

சிறுமி விளையாடிய இடத்தின் சிசிடிவி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் அஸ் பாக் ஆலமு தான் குற்றவாளி என்று உறுதி செய்த பின்னர் அவரை கைது செய்த 110வது நாளில் நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது .

பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை நிச்சயம் என்று அனைவரும் ஒரு மரண பயத்தை ஏற்படுத்த்தும் வகையில் எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அதிரடி தீர்ப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதகஜராஜா: 6 நாளில் மாபெரும் வசூல் சாதனை..

More in Featured

To Top