Connect with us

ஜெய்ப்பூரில் இன்று ஜெயிக்கப்போவது யார்..? ராஜஸ்தான் – மும்பை அணிகள் இன்று மோதல்…!!!

Featured

ஜெய்ப்பூரில் இன்று ஜெயிக்கப்போவது யார்..? ராஜஸ்தான் – மும்பை அணிகள் இன்று மோதல்…!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RR – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Featured

To Top