Connect with us

இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு: தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சி..

Featured

இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு: தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சி..

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார். 1980-ஆம் ஆண்டில் வெளிவந்த “வித்தியாசமானவர்கள்” என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான வேலு பிரபாகரன், தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

பின்னர், “நாளைய மனிதன்” என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமான இவர், “புதிய ஆட்சி”, “அசுரன்” போன்ற படங்களை இயக்கி, ஒளிப்பதிவிலும் பங்காற்றினார். பிறகு, இயக்கமும் ஒளிப்பதிவும் விட்டு விலகி, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் இவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி 68 வயதில் மாரடைப்பால் உயிர் இழந்தார். இயக்குனர் வேலு பிரபாகரனின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பெரும் அதிர்ச்சியாகும். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top