Connect with us

மக்களே எதுக்கும் அஞ்ச வேண்டாம் நாங்க இருக்கோம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Featured

மக்களே எதுக்கும் அஞ்ச வேண்டாம் நாங்க இருக்கோம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் சென்னை மாநகரம் தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால் சென்னை மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது . கனமழை காரணமாக சென்னையில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குளேயே முடங்கியுள்ளனர்.

சென்னை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்சார வசதியும் இல்லாததால் தற்போது பொதுமக்கள் அனைவரும் செய்வதறியாது குழம்பி போய் உள்ளனர்.

இந்நிலையில் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாடு அரசு எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் ஏதேனும் புகார் அளிக்க நினைத்தால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு அலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென கூடுதலாக ஐஏஎஸ் அதிகரிகள் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பள்ளி கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்கிடுக - ஜவாஹிருல்லா வேண்டுகோள்..!!

More in Featured

To Top