Connect with us

ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ‘டன்கி’ படத்தின் டிரைலர் வெளியானது..!!

Cinema News

ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ‘டன்கி’ படத்தின் டிரைலர் வெளியானது..!!

பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ‘டன்கி’ படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அகல பாதாளத்தில் கிடந்த பாலிவுட் சினிமாவை பதான் , ஜவான் என்ற இரு படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றியின் மூலம் பாலிவுட் சினிமாவை மீண்டும் வானுயர செய்தவர் நடிகர் ஷாருக்கான்.

அடுத்தடுத்து மாபெரும் இரு வெற்றி படங்களை கொடுத்த இவரது நடப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘டன்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டீசருக்கு கொடுத்த வரவேற்பை போல் இப்படத்தின் ட்ரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதோ அந்த ட்ரைலர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top