Connect with us

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Featured

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைக்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் தங்கி அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வார இறுதி அநாட்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளுக்காக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் .

இதனை கருத்தில் கொண்டு மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது .

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கும், இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனி ஆளாக போராடிய ருதுராஜ் - பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top