Connect with us

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

Featured

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன.

போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. விடியா திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது.

இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது. வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” - யோக்ராஜ் சிங் ஆவேசம்

More in Featured

To Top