Connect with us

வெற்றிநடைபோடும் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Cinema News

வெற்றிநடைபோடும் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் வாழை திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனதார பாராட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரான மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் திரைப்படமே வாழை .

தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரசிகர்களை தாண்டி திரை பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழை படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் மனதார பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு - வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

More in Cinema News

To Top