Connect with us

தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் – Bloody Beggar – வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் – Bloody Beggar – வெளியான தாறுமாறு தகவல்..!!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அமரன் – Bloody Beggar திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் இளம் கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் . இருவரும் தங்களது ஆரம்பல பயணத்தை சின்னத்திரையில் இருந்ததால் அப்போதிலிருந்தே அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வர தொடங்கிவிட்டது.

படி படியாக முன்னேறி இன்று திரையுலகின் உச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கும் நிலையில் தற்போது நடிகர் கவினும் தனது அசத்தலான நடிப்பால் இன்று மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த இரு பெரும் நட்சத்திரங்களுமே நடித்துள்ள திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ படமும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ON THE WAY NANBA" ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

More in Cinema News

To Top