Connect with us

சச்சின், கோலிக்கு அடுத்து இவர்தான்.. சாதனை படைத்த ஷுப்மன் கில்

Shubman_Gill

Sports

சச்சின், கோலிக்கு அடுத்து இவர்தான்.. சாதனை படைத்த ஷுப்மன் கில்

விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் இரண்டாவது இன்னிங்சில் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

முந்தைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் இதற்கு முந்தைய இன்னிங்ஸ்களில் தொடர்ந்து சொதப்பி வந்தார். முந்தைய இன்னிங்ஸ்களில் 6, 10, 29*, 2, 26, 36, 10, 23, 0, 34 என்ற அளவிலேயே ரன்களை எடுத்து தடுமாறிய நிலையில், தற்போது அந்த சோதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர் 147 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 104 ரன்கள் சேர்த்தார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் இதன் மூலம் ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லுக்கு இது 10வது சதமாகும். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 25 வயதிற்குள் குறைந்தபட்சம் 10 சதங்களை அடித்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனைதான் அது.

சச்சின் டெண்டுல்கர் 30 சதங்களும், விராட் கோலி 21 சதங்களும் அடுத்து இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மேலும், ஷுப்மன் கில்லுக்கு அடுத்து தலா 9 சதங்களுடன் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் நான்காவது இடத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோ அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட் - டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் உணர்ச்சிப்பூர்வ பதிவு

More in Sports

To Top