Connect with us

இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜுக்கு அரசு வேலை மற்றும் புது வீடு – தெலங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

Featured

இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜுக்கு அரசு வேலை மற்றும் புது வீடு – தெலங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வசதியுள்ள நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அரசு வேலை மற்றும் புது வீடு வழங்க உள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சிறப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற இறுதிபோட்டியில் அட்டகாசமாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வென்றது .

திட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பின் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை தாயகம் கொண்டு வந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தற்போது பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முகமது சிராஜுக்கு, தெலங்கானா மாநில அரசு பணி மற்றும் ஹைதராபாத்தில் புது வீடு ஒன்றையும் வழங்க உள்ளதாக ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதேபோல் ரோஹித் , சூரியகுமார் , ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களை நேரில் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு பாராட்டுகளையும் பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top