Connect with us

3வது டி20 போட்டி : பேட்டிங்கில் அசத்திய கில் மற்றும் ருதுராஜ் – ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!

Featured

3வது டி20 போட்டி : பேட்டிங்கில் அசத்திய கில் மற்றும் ருதுராஜ் – ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

இதில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் 36 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து அதிரடியாக ஆடிய கேப்டன் கில் அரைசதம் கடந்து 66 ரன்களில் வெளியேறினார் . இதையடுத்து வந்த அபிஷேக் 10 ரன்களில் விக்கெட்டை இலக்க பொறுப்புடன் விளையாடி வந்த ருதுராஜ் 49 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வருகிறது.

5 போட்டிகள் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளதால் இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சம்பவம் லோடிங் : வெளியானது ‘கங்குவா’ படத்தின் அடுத்த அப்டேட்..!!

More in Featured

To Top