Connect with us

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு..!!

Featured

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் இந்திய அணி தொடரையும் கைப்படறி உள்ளது .

இந்நிலையில் ஜிம்பாப்வேவில் உள்ள புகழ்பெற்ற Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 5வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் போட முடிவு செய்துள்ளது . இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் தொடரை தவறவிட்டுள்ள ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறுமா இல்லை வெற்றியுடன் இந்திய அணி நாடு திரும்புமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top