Connect with us

முதல் போட்டியிலேயே சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த சர்பராஸ் கான்

Sunil_Gavaskar_Sarfaraz_Khan

Sports

முதல் போட்டியிலேயே சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த சர்பராஸ் கான்

26 வயதான சர்பராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக செயல்பட்டு சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்பராஸ் கானுக்கு இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் போட்டியாகும்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 72 பந்துகளில் 68 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் எட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமையை சர்பராஸ் கான் பெற்றார். இவருக்கு முன், திலாவர் உசேன், சுனில் கவாஸ்கர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரால் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.

1934ல் இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்த போது திலாவர் இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் ஆனார். அதன் பிறகு சுனில் கவாஸ்கர் 1971ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் அரை சதம் அடித்த போது இரண்டாவது வீரர் ஆனார்.

அதன் பின்னர் நீண்ட காலமாக இந்த சாதனையை யாரும் செய்யாத நிலையில், சரியாக 50 ஆண்டுகள் கழித்து ஸ்ரேயாஸ் ஐயர் 2021இல் நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் அந்த போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பஞ்சாப் அணியிடம் இதனால் தான் தோற்றோம் - அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய CSK கேப்டன் ருதுராஜ்..!!

More in Sports

To Top