Connect with us

“சாந்தனு, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘Blue Star’ படம் எப்படி இருக்கு?! முழு விமர்சனம் இதோ..!”

Movie Reviews

“சாந்தனு, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘Blue Star’ படம் எப்படி இருக்கு?! முழு விமர்சனம் இதோ..!”

ப்ளூ ஸ்டார் படம் பார்த்த ரசிகர்கள் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் நடிகர் நடிகைகளை இயக்குநர் அழகாக தேர்வு செய்து இருக்கிறார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் என அனைத்து கதாபாத்திரமும் ரசிக்கும் படி இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். அதே போல அசோக் செல்வனின் தம்பியாக வரும் பிரித்வி கலக்கி விட்டார்.

படத்தில் வரும் ஒவ்வொரு சீரியஸ் சீனையும் காமெடியாக்கி விட்டார் என்றார். படத்தை கொண்டு சென்ற விதமும், படத்தின் டெக்னிக்கல் காட்சியும் நன்றாக உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான படத்தை இயக்குநர் கொடுத்து இருக்கிறார். கிராமத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல திறமை இருக்கும் என்பதையும், அவர்கள் நல்ல ஒரு இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி உள்ளார்.

நீலம் ப்ரோடக்ஷன் என்றாலே அதில், இரண்டுவிதமான பார்வை இருக்கும் ஒன்று சமூக நீதி, மற்றொன்னு தலித் அரசியல் பேசுவார்கள் என்ற பார்வை இருக்கும். ஆனால், இந்த படத்தில் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அந்த அப்ரேசை இயக்குநர் ஜெய் அவர்கள் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

காலணியும் ஊரும் ஒன்றாக சேர வேண்டும் அப்படி சேர்ந்தால், கிரிக்கெட்டில் மட்டுமில்லை வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம் என்பதை இந்த படம் உணர்த்துகிறது என்றனர். கிரிக்கெட்ல சாதிக்க நினைக்கிற ஹீரோஸ் இதற்காக எந்தளவு போராடுகிறார்கள் என்பதை MOTIVATIONAL னா TREAT பண்ணாம சூழ்நிலை, காதல், அரசியல் இதனால ஏற்படும் பாதிப்பு, பிரச்சனை குறித்து இந்த படம் அழகாக பேசி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

More in Movie Reviews

To Top