Connect with us

RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு?! முழு விமர்சனம் இதோ..!

Movie Reviews

RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு?! முழு விமர்சனம் இதோ..!

சிங்கப்பூர் சலூன் என்று படத்தின் பெயரை கேட்டதுமே சலூனை மையமாக வைத்த படம் தான் என்பது நமக்கு தெளிவாக தெரிந்துவிடுகிறது. ஆர்.ஜே. பாலாஜி தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவை(லால்) பார்த்து இன்ஸ்பையர் ஆகிறார். ஒரு நாள் நானும் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு.

இன்ஜினியரிங் படித்திருக்கும் கதிர், பல தடைகளை தாண்டி சென்னையில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் கடை ஒன்றை திறக்கிறார். இந்த கடையை லோகேஷ் கனகராஜ் திறந்து வைக்கிறார். இதில் ஜான் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்து இருக்கிறார்.

இவரும் சலூன் கடை வைத்து இருப்பதால், தனக்கு போட்டியாக கடையை திறந்த RJ பாலாஜிக்கு பலவிதத்தில் பிரச்சனையை கொடுக்கிறார். சலூன் கடை வைத்தால் ஏழையாத்தான் இருக்கணுமா என்ற கான்செப்டையும், முடிவெட்டுவது ஒன்றும் நகம் வெட்டும் வேலை இல்லை அது ஒரு கலை என்ற கருத்தையும் படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இறுதியில், கதிர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை. அதே போல, பல திரைப்படங்களில் நாம் பார்த்த விஷயத்தை புதிதாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கோகுல். கதிரின் மாமனாராக நடித்திருக்கிறார் சத்யராஜ் கஞ்சன் கதாபாத்திரத்தில் தனது இயல்பான நய்யாண்டியை வெளிப்படுத்தி உள்ளார்.

இடைவேளைக்கு முன்பு சத்யராஜ் வரும் காமெடி காட்சிகள் அருமை. சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிடும். குறிப்பாக சத்யராஜின் பீர் காமெடி படத்திற்கு செம பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், பாலாஜியின் நண்பனாக கிஷன் தாஸ், சகலையாக வரும் ரோபோ ஷங்கர் என அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜெய்ப்பூரில் இன்று ஜெயிக்கப்போவது யார்..? ராஜஸ்தான் - மும்பை அணிகள் இன்று மோதல்…!!!

More in Movie Reviews

To Top