Connect with us

“கண்ணகி: 4 பெண்களின் கதை..! படம் எப்படி இருக்கு?!”

Movie Reviews

“கண்ணகி: 4 பெண்களின் கதை..! படம் எப்படி இருக்கு?!”

நல்ல மாப்பிள்ளை பார்க்குறேன் என்கிற பெயரில் மகளின் திருமணத்துக்கு அம்மாவே வில்லங்கமாக இருப்பது போல அம்மு அபிராமியின் கதை ஆரம்பம் ஆகிறது. ஒருத்தர் ஒருத்தரா வந்து பார்ப்பதை விட 4,5 பேரா வந்து பார்த்துட்டு போகட்டும் என்கிற வலிமையான வசனம், பீரியட்ஸ் நேரத்தில் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்வது என அவரது போர்ஷன் ஒரு பக்கம் நகர்கிறது.

அடுத்து சுதந்திர பறவை ஃபெமினிஸ்ட் என்கிற அடையாளத்துடன் ஷாலின் ஜோயா லிவிங் டுகெதர் வாழ்க்கை, உள்ளாடையை எடுத்து மேலாடையாக போட்டுத் திரிவது தான் பெண்ணியம் என செய்யும் அலப்பறை இன்னொரு பக்கம். மூன்றாவதாக கணவர் விவாகரத்து கேட்ட நிலையில், விவகாரத்து தர முடியாது என கோர்ட்டுக்கு அழைந்து திரியும் வித்யா பிரதீப்பின் கண்ணீர் கதை.

கடைசியாக கீர்த்தி பாண்டியன் படத்தின் இயக்குநரான யஷ்வந்தே ஹீரோவாக நடிக்க அவரால் கர்ப்பமாகி விட்டு அந்த கருவை கலைக்க மருத்துவமனைக்கு அலைவதாக உள்ளார். இந்த 4 பேரின் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து எழுதப்பட்ட விதத்திலும், வசனங்களிலும் இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

4 நடிகைகளும் அவர்களுக்கு துணையாக நடித்துள்ள நடிகர்களும், குணசித்ர கதாபாத்திரத்தில் வரும் மறைந்த நடிகர் மயில்சாமி, நடிகை மெளனிகா என அத்தனை நடிகர்களும் தான் இந்த படத்தை ஓரளவுக்கு நடிப்பால் தாங்கிப் பிடித்துள்ளனர். பின்னணி இசை பலம். பாடல்கள் ஆனால், கைகொடுக்கவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தி என்பதை விட ஒருத்தருக்கு ஒருத்தர் என்கிற வசனத்துக்கு கைதட்டல்கள் பறக்கிறது.

திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் கோட்டை விட்டு இருப்பதும், இரண்டாம் பாதி முழுவதும் ஸ்லோ மோஷனில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்காமல் அதை வைத்தே 3 மணி நேரம் ஓட்ட வேண்டும் என பீச் குதிரை போல ஓட்டி ரசிகர்களை டயர்ட் ஆக்கி விடுகிறார். விஷுவலாக படம் எந்தவொரு பெரிய இம்பேக்ட்டையும் கொடுக்கவில்லை. இயக்குநரின் முயற்சிக்காகவும் நடிகர்களின் உழைப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் சேதுபதி மீது ஜேம்ஸ் வசந்தன் குற்றச்சாட்டு: பெண்கள் குறித்த அவமதிப்பு!

More in Movie Reviews

To Top