Connect with us

“விஜய் குமார் நடிப்பில் வெளியான Fight Club படத்தின் முழு விமர்சனம் இதோ..!”

Movie Reviews

“விஜய் குமார் நடிப்பில் வெளியான Fight Club படத்தின் முழு விமர்சனம் இதோ..!”

வடசென்னை என காசிமேடு பக்கத்தையே காட்டி எத்தனை நாள் தான் போரடிக்கிறது என நினைத்து புதிதாக பழவேற்காடு பக்கம் கேமராவை கொண்டு போய் அந்த கடல் பக்கத்தில் நடக்கும் கலவரங்களை படமாக்கிய விதத்தில் இயக்குநர் அப்பாஸ் பாராட்டுக்களை அள்ளுகிறார். பாக்ஸரான பெஞ்சமினுக்கு (கார்த்திகேயன் சந்தானம்) ஏரியா புள்ளைங்க எல்லாம் போதை பொருளுக்கும் பொருளை எடுத்துக் கொண்டு கொலைகாரர்களாகவும் ஆகாமல் லேபில் வெப்சீரிஸில் வரும் ஜெய் போல அவரகளை விளையாட்டில் பிரபலமாக்க முயற்சிக்கிறார்.

ஆனால், எதிர்தரப்பான கிருபாவுடன் (சங்கர் தாஸ்) பெஞ்சமினின் தம்பி ஜோசப் சேர்ந்துக் கொண்டு அண்ணன் பெஞ்சமினை போட்டுத் தள்ளுகிறார். ஆனால், ஜோசப்பை வைத்து கேம் ஆடிவிட்டு கிருபா அரசியல்வாதியாக மாறி அந்த ஏரியாவை தன் வசப்படுத்தி விட்டு எட்டப்பனாக மாறிய ஜோசப்பை கழட்டி விடுகிறார். கிருபாவை பழிவாங்க ஜோசப் எப்படி ஹீரோ செல்வாவை (விஜய் குமார்) இந்த சதி வலையில் சிக்க வைக்கிறார் என்பதும் இறுதியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

உறியடி படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த விஜய்குமார் அங்கே உள்ள அரசியலை வெளிக்காட்டி இருந்தார். இந்த படத்தில் இளைஞராக நடித்துள்ள விஜய் குமார் அதே போலவே ரவுடியாக மாறி அடிதடி, வெட்டுக் குத்து என பொளந்து கட்டுகிறார். படம் முழுக்கவே டிரெய்லரில் காட்டியதை விட அதிகமாக போதை, புகை மற்றும் வெட்டுக்குத்து தான் நிரம்பி வழிகிறது. முதல் பாதி முழுக்க வேக வேகமாக நகர தப்பித்துக் கொள்ளும் படம், இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்குகிறது.

எல்லாமே புதிய முகங்கள் என்பதால் ஷார்ட் ஃபிலிம் ஃபீல் ரசிகர்களுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ தனது அட்டகாசமான உழைப்பை கொட்டி படத்தை தூக்கி நிறுத்துகிறார். அவரை போலவே 96 புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் காட்சிகளுக்கு இசையால் உயிருட்டுகிறார். விஜய்குமார் தனது துடிப்பான நடிப்பை படம் முழுக்க வெளிப்படுத்தி டைட்டிலுக்கு நேர்மை செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் நடிகரும் அசத்தல்.

முதல் பாதியை திறமையாக கையாண்ட இயக்குநர் அப்பாஸ் இரண்டாம் பாதியில் படத்தை முடித்தே ஆக வேண்டுமே என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஓடியது சொதப்பி விட்டது. ஹீரோயின் மோனிஷாவும் படத்திற்கு எந்தவித பயனும் தரவில்லை. ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் கை கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் படப் பிரியர்கள் தாராளமாக தியேட்டரில் ஒரு முறை பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Movie Reviews

To Top