Connect with us

“அன்னபூரணி போட்ட சாப்பாடு எப்படி இருக்கு?! படத்தின் விமர்சனம் இதோ..!”

Cinema News

“அன்னபூரணி போட்ட சாப்பாடு எப்படி இருக்கு?! படத்தின் விமர்சனம் இதோ..!”

கோயிலில் பிரசாதம் செய்யும் பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகிக்கு சமையல் கலை மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெரிய சமையல் கலை வல்லுனராக மாற வேண்டும் என நினைக்கும் அவர் அசைவ உணவுகளையும் சமைக்க ஆரம்பிக்கிறார். உணவு என்பது தனி மனித விருப்பம் என்றும் அதை கடவுள் பெயரால் பிரிக்கக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

ஷங்கரின் உதவி இயக்குநர் என்றாலும், அட்லீயின் பாதிப்பு தான் அதிகம் தெரிகிறது. ராஜா ராணி போல அதே ஆட்களை வைத்து நாமும் ஒரு ஹிட் கொடுத்து விடலாம் என நினைத்த இயக்குநர் மேக்கிங்கில் பல இடங்களில் எழுத்து ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் கோட்டை விட்டிருக்கிறார். நயன்தாரா, சத்யராஜ், அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

சில வசனங்கள், சில கருத்துக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், பல இடங்களில் படம் தொய்வடைகிறது. ஆரம்பத்தில் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தும் நயன்தாரா விபத்து நடந்த பிறகு ராஜா ராணி நயன்தாரா போல நடிப்பில் மிரட்டுவது படத்திற்கு பலமாக மாறி உள்ளது.

நடிகர் ஜெய்யின் போர்ஷன் ராஜா ராணி படத்தில் ரொம்பவே அழுத்தமாக அமைந்திருக்கும். ஆனால், இந்த படத்தில், அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல கடைசி வரை அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்காமல் விட்டு இருப்பது மைனஸ் ஆக மாறியுள்ளது. தமன் இசையில் பாடல்களும் கவனம் ஈர்க்கவில்லை. மொத்தத்தில் இந்த அன்னபூரணி படத்தில் உப்பு உள்ளிட்ட சில சுவைகள் ரொம்பவே மிஸ்ஸிங்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top