Connect with us

“நல்ல விளையாட்டைக் கொடுத்தீர்கள் என்றால்..! பிரதீப் ஆண்டனி போட்ட போஸ்ட்! Viral!”

Bigg Boss Tamil Season 7

“நல்ல விளையாட்டைக் கொடுத்தீர்கள் என்றால்..! பிரதீப் ஆண்டனி போட்ட போஸ்ட்! Viral!”

பிக் பாஸ் 7ஆவது சீசனில் இந்த வாரம் விறுவிறுப்பாக சென்று வருகிறது. மாயாவுக்கு இந்த வாரம் கேப்டன் பதவி தரப்பட்டுள்ளதால், அவரது கேங்குக்கும் விசித்ரா மற்றும் விஜே அர்ச்சனாவுக்கும் இடையே சண்டை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஜோவிகா, நிக்சன், ஐஸ்வர்யா, பூர்ணிமா, மாயா ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து சேர்ந்து விஜே அர்ச்சனாவை திட்டி வருகின்றனர். கேப்டன் மாயா, விசித்ராவுக்கு டூத் பிரெஷ்ஷை மறைத்து வைத்து போக்கு காட்டுகிறார். இதனால் மெல்ல பிரச்னை அதிகரிக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரதீப்பால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பிக்பாஸ் போட்டியாளர்கள் எச்சரிக்க, ரெட் கார்டு வெளியேற்றப்பட்டார், பிரதீப் ஆண்டனி. இந்நிலையில், பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட பின், அவரது ரசிகர்கள், இது சதி வேலை எனவும்; பிரதீப் தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்றும், மொத்த பிக்பாஸ் லைவ் நிகழ்ச்சியைப் பார்த்து, பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பூர்ணிமா மற்றும் மாயா செய்த திருகுவேலைகளை வீடியோ கிளிப்களாக சமூக வலைதளத்தில் போட்டு அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்துபோனபிறகு, பிரதீப் ஆண்டனி கமலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார். அதிலும் தீரவிசாரிப்பதே மெய் என ஹேஷ்டேக்குடன் தனது பதிவினைப் போட்டார். இந்நிலையில் தற்போது ஒரு பதிவினைப் போட்டிருக்கிறார், பிரதீப் ஆண்டனி. அதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

அதில், ‘ நீங்க ஒரு நல்ல விளையாட்டைக் கொடுத்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு நல்ல ஷோவை கொடுப்பேன்’ எனவும் கூறி, விஜய் டிவி, கமல்ஹாசன், பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை டேக் செய்துள்ளார். மேலும், நான் உறுதி அளிக்கிறேன் திரும்பவும் வந்தால், என்னுடைய பழக்க வழக்கங்கள் ஒரு இடைவேளை முடிச்சிட்டு வர படத்தோட பழிவாங்கும் மோட், செகண்ட் ஆஃப் மாதிரி ஆடுறேன்’ என்றார். இதனைப் பலரும் ரீட்வீட் செய்து, பிரதீப் ஆண்டனி திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top