Connect with us

“இதுவே ஒரு ஆண் தன் உள்ளாடையை எடுத்து காண்பித்திருந்தால்..” வைரலாகிவரும் பிக் பாஸ் ப்ரோமோ!”

Bigg Boss Tamil Season 7

“இதுவே ஒரு ஆண் தன் உள்ளாடையை எடுத்து காண்பித்திருந்தால்..” வைரலாகிவரும் பிக் பாஸ் ப்ரோமோ!”

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்கள் மீது வழக்கு தொடக்கலாம் என பிக் பாஸ் கூறி இருந்த நிலையில் பெரும்பாலும் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விசித்ரா குரூப் வெற்றி பெற்று வருகிறது.

குறிப்பாக அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா செயல்படுகிறார் என்று பூர்ணிமா தொடுத்த வழக்கில் பூர்ணிமா ஆதரவாளரான நிக்சன் நீதிபதியாக இருந்தும் அவர் விசித்ராவுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தார்.

மொத்தத்தில் மாயா கேங் இந்த நீதிமன்ற டாஸ்க்கில் தோல்வி மேல் தோல்வி பெற்றும், விசித்ரா குரூப் வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நிலையில் நிக்சனிடம் மாயா உள்ளாடையை காட்டியது குறித்த வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கில் வாதாடும் தினேஷ், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கண்ணியம் உள்ளது, மாயா செய்தது தவறு என வாதாடினார்.

ஆனால் மாயா விளையாட்டுக்கு தான் செய்ததாக கூறினாலும், ‘இதுவே ஒரு ஆண் தன் உள்ளாடையை எடுத்து பெண்ணிடம் காண்பித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று அர்ச்சனா நச்சென ஒரு பாயிண்டை அர்ச்சனா வைத்தார். இந்த வழக்கிலும் விசித்ரா குரூப்புக்கு தான் வெற்றி கிடைத்தது போல் இருக்கிறது. இதனை அடுத்து மாயா, பூர்ணிமா, ஐஷு, அக்சயா, ஜோவிகா உள்ளிட்டோர் காரசாரமாக விவாதம் நடத்தும் காட்சி இன்றைய ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top