Connect with us

இனி ஜாலியா போலாமுங்கோ : கோவை – பெங்களூரு இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

Featured

இனி ஜாலியா போலாமுங்கோ : கோவை – பெங்களூரு இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார் .

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தற்போது அதிநவீன போக்குவரத்து வசதிகள் மக்களின் பயன்பாட்டிற்காக தொடஙக்கப்பட்டு வருகிறது . அந்தவகையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதில் வந்தாரை வாழவைக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து கொங்கு நாடான கோவைக்கு இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் அயோத்யா ரயில் நிலையம் திறப்பு விழாவில் 6 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் . இந்த 6 வந்தே பாரத் ரயில்களில், கோவை – பெங்களூரு செல்லும் கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மற்றும் மங்களூரு சென்டரல்-மட்காவு செல்லும் மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் என தெற்கு ரயில்வேக்கு 2 ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், 11.30க்கு பெங்களூரு சென்றடையும்; பெங்களூருவில் மதியம் 1.40க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இந்த வழித்தடங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த வசதியினை பயன்படுத்தி மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Featured

To Top