Connect with us

நீ வேணா சன்டைக்கு வாடா – இறுதி நேரத்தில் கலைக்கட்டும் பிக் பாஸ் வீடு..!!

Bigg Boss Tamil Season 7

நீ வேணா சன்டைக்கு வாடா – இறுதி நேரத்தில் கலைக்கட்டும் பிக் பாஸ் வீடு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையிலும் போட்டியாளர்களுக்கு இடையில் வரும் சண்டை மட்டும் குறைந்தபாடு இல்லை . அதற்கேற்ப இனறைய ப்ரோமோக்களும் அமைந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் உங்கள் கேம் மத்தவங்களோட சிறந்தது என்று சொல்லும்படி பிக் பாஸ் கூறுகிறார்.

இதையயடுத்து வழக்கம் போல் மற்ற போட்டியாளர்களை விட நான் சிறந்த முறையில் கேம் ஆடுகிறேன் என்று கூற அதில் பலர் அர்ச்சனாவை டார்கெட் செய்து சொல்வது போல் தெரிகிறது.

பின்னர் அர்ச்சனாவின் முறை வரும்போது அவர் ஏதோ கூற தினேஷ் உங்க கேம் யாரை விட சிறந்தது அதை மட்டும் சொல்லுங்கள் என்று பதிலடி கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் செம காண்டான அர்ச்சனா என்னால் இனி இந்த டாஸ்க் செய்ய முடியாது என்று கூறிவிட்டு செல்ல ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இந்த சீசனின் மூத்த போட்டியாளரான விசித்ரா நேற்று இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மீதம் இருக்கும் போட்டியாளர்களில் யார் எந்த டைட்டிலை தட்டிச்செல்ல போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி: ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றம் நோக்கி

More in Bigg Boss Tamil Season 7

To Top