Connect with us

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Featured

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது .

அரசின் இந்த திடீர் உத்தரவுக்கு காரணம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தான் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழ்ச்சந்திரன் ஐபிஎஸ்- ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம்

  • ஜெயஸ்ரீ ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு காவல்துறை செயலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம்

  • சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக மாற்றம்

  • லட்சுமி ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை பிரிவு ஐஜியாக மாற்றம்

  • ராஜேஷ்வரி ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக மாற்றம்

  • ராஜேந்திரன் ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரக தலைமை பிரிவு மற்றும் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக மாற்றம்

  • முத்துசாமி ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றம்

  • மயில்வாகனன் ஐபிஎஸ் – ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம்

  • வெண்மதி ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குகெதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஐஜியாக மாற்றம்

  • சரோஜ்குமார் தாக்கூர் ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, வேலூர் சரக டிஐஜியாக மாற்றம்

  • மகேஷ் குமார் ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை போக்குவரத்து காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்

  • தேவராணி ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்

  • உமா ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சேலம் சரக டிஐஜியாக மாற்றம்

  • திருநாவுக்கரசு ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக மாற்றம்
See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

  • ஜெயந்தி ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக மாற்றம்

  • ராமர் ஐபிஎஸ் – டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு ரயில்வே காவல்துறை டிஐஜியாக மாற்றம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top