Connect with us

மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Featured

மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கவும், முழுவதுமாக கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21.12.2023 அன்று ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பி.கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள்.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கவும், முழுவதுமாக கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வீடுகளை புதிதாக கட்ட 4 லட்சமும், சேதமடைந்த வீடுகளை சீர்செய்ய 2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2.64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணமாக 250 கோடி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திடீரென வெளிநாடு சென்ற ரஜினிகாந்த் - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Featured

To Top