Connect with us

அடக்கடவுளே சூர்ய குமார் யாதவுக்கு வந்த புதிய சிக்கல் – செம அப்சட்டில் மும்பை அணி..!!

Featured

அடக்கடவுளே சூர்ய குமார் யாதவுக்கு வந்த புதிய சிக்கல் – செம அப்சட்டில் மும்பை அணி..!!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்ய குமார் இந்த தொடரில் பங்கேற்பதே சந்தேகம் என கூறப்படுகிறது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த தொடரில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அணைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொள்ள தங்களது அணியுடன் இணைந்து வருகின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்ய குமார் பங்கேற்பதே சந்தேகம் என கூறப்படுகிறது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் சூர்யகுமார் யாதவ் தேர்ச்சி பெறவில்லை என ஷாக்கிங் தகவல் சூரியகுமார் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

அடுத்த சோதனை நாளை மறு தினம் நடைபெற உள்ளதாகவும் அவர் விரைவில் முழு உடல் தகுதி பெற்று மும்பை அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் கவலையில் இருக்கும் ரசிகர்கள் கம் பேக் சூர்யா என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top