Connect with us

உலகக்கோப்பை வென்ற மைதானத்தில் புல்லை பிடுங்கி சாப்பிட்ட ரோஹித் சர்மா – என்ன காரணம் தெரியுமா..?

Featured

உலகக்கோப்பை வென்ற மைதானத்தில் புல்லை பிடுங்கி சாப்பிட்ட ரோஹித் சர்மா – என்ன காரணம் தெரியுமா..?

உலகக்கோப்பை வென்ற பார்படாஸ் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புல்லை பிடுங்கி சாப்பிட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அதற்கான காரணத்தை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

உலககெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் 20 அணிகள் வீரர்களின் கோப்பை கனவுடன் விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த போட்டியில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது .

இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மீண்டும் கைப்பற்றி ஒட்டுமொத்த இந்தியர்களை பெருமையடைய செய்துள்ளது .

இந்நிலையில் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதுடன் ஒட்டுமொத்த மைதானமே மிகவும் எமோஷனலாக காணப்பட்டது.

வீரர்கள் அனைவரும் கண்ணீர் விட்ட அழுத காட்சிகள் இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது . அப்போது பார்படாஸ் மைதானத்தின் புல்லை இந்திய அணியின் ரோஹித் சர்மா பிடுங்கி சாப்பிட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது.

இந்நிலையில் ரோஹித் சர்மா எதற்காக அந்த புல்லை பிடுங்கி சாப்பிட்டார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மாவே அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

“பார்படாஸ் மைதானத்தின் பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதனால் இந்த பிட்சின் ஒரு பகுதியை என்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினேன். எங்கள் கனவை நனவாக்கிய இந்த பிட்சை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன் என ரோஹித் சர்மா மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top