Connect with us

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்..!!

Featured

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – பதக்கங்களை குவிக்கும் தமிழக வீரர்கள்..!!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை ஜன.19 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார் .

ஜன.23 அன்று தொடங்கி ஜன.31 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன .

இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது .

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர் .

இந்நிலையில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழக அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top