Connect with us

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் ‘அயலான்’ – வசூல் விவரம் வெளியிட்ட படக்குழு

Cinema News

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் ‘அயலான்’ – வசூல் விவரம் வெளியிட்ட படக்குழு

திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூல் ஈட்டி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவான இப்படத்தில் எஸ்.கே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வரும் அயலான் படம் பல கோடி லாபம் பெற்று வருவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது படக்குழுவே வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அயலான் படம் இதுவரை மொத்தமாக 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top