Connect with us

IPL 2024 : சுனில் – வெங்கடேஷ் அதிரடியால் பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா அணி..!!

Featured

IPL 2024 : சுனில் – வெங்கடேஷ் அதிரடியால் பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா அணி..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை தனது அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணியின் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 2வது ஓவரிலேயே சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அணிக்கு தேவையான ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார் . ஆனால் மறுபுறம் ஆடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதி வரை சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை குவித்து களத்தில் கெத்தாக இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 182 ரன்களைச் குவித்துள்ளது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர் . இருவரும் ஆரம்பம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை பொளந்து கட்ட பவர்பிளே ஓவர்களில் தேவையான ஸ்கோர் வந்துவிட்டது .

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சுனில் நரேன் அரைசதம் கடந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார் அவரை தொடர்ந்து சால்ட்டும் உயிரிழந்தார் .

பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்து தங்களது சரவெடி ஆட்டத்தை தொடங்கினர் . சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . ஸ்ரேயஸ் மற்றும் ரிங்கு இணை 16.6 ஓவர்களில் இலக்கை கடந்து பெங்களூரு அவர்கள் மண்ணிலேயே மீண்டும் வீழ்த்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வென்ற Purple Cap - மாறி மாறி அன்பை பரிமாறிக்கொண்ட நட்டு மற்றும் அவரது மகள்

More in Featured

To Top