Connect with us

ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக முழக்கமிட்ட ரசிகர்கள் – பொங்கி எழுந்த அஷ்வின்..!!

Featured

ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக முழக்கமிட்ட ரசிகர்கள் – பொங்கி எழுந்த அஷ்வின்..!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்ட வருவது சரியல்ல என ராஜஸ்தானின் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகாலக IPL தொடரின் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் ஷர்மா தான் வழிநடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இந்த வருடம் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதனால் செம் காண்டான ரோஹித்தின் ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். இதனை சக வீரர்கள் பலரும் கண்டித்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களின் செயலுக்கு ராஜஸ்தானின் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்வின் கூறியதாவது :

“FAN WAR என்பது இந்தியாவில் மிகவும் அசிங்கமான நிலைக்கு செல்கிறது. ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில் சொந்த அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமே இது நடக்கிறது.

கங்குலி கேப்டன்சியின் கீழ் சச்சின் விளையாடவில்லையா? ராகுல் டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் விளையாடவில்லையா? தோனி கேப்டன்சியின் கீழ் எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களும் விளையாடினார்கள்

மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டது முற்றிலும் தவறான செயல் என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH - RR இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top