Connect with us

திடீர் மாரடைப்பால் உயிரிழந்த டேனியல் பாலாஜி – கண்ணீர் கடலில் மூழ்கிய திரையுலகம்..!!

Cinema News

திடீர் மாரடைப்பால் உயிரிழந்த டேனியல் பாலாஜி – கண்ணீர் கடலில் மூழ்கிய திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பிரபல குணசித்ர நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சின்னத்திரை நடிகராக கலைத்துறையில் கால்பதித்து வெள்ளித்திரையில் மக்கள் மனதில் நின்ற குணசித்ர நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த டேனியல் பாலாஜி அதன் பின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கொடூர வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார்.

இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த குணசித்ர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தபோது அவர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள டேனியல் பாலாஜியின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டேனியல் பாலாஜியின் உடல் தற்போது புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top