Connect with us

IPL 2024 : இறுதியில் மிரட்டிய பெங்களூரு – சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

Featured

IPL 2024 : இறுதியில் மிரட்டிய பெங்களூரு – சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL தொடரின் முதல் போட்டியில் சென்னைக்கு அணிக்கு எதிராக பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரராக டுப்ளிசஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பிய பெங்களூரு கேப்டன் டுப்ளிசஸ் மெல்ல மெல்ல அதிரடியை காட்ட தொடங்கினார். இதனால் ஆட்டம் லேசாக பெங்களூர் பக்கம் சென்றபோது முத்தாபிகுர் வீசிய பந்தில் டுப்ளிசஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த படித்தார் மற்றும் மேக்ஸ் வெல் இருவரும் ரன் எதுவும் எடுக்கமாம்ல் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராவத் மாற்று தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பந்துகளை வெளுத்து வாங்கினார். பவுடரிகளுக்கும் சிக்ஸர்களும் பந்துகளை பறக்க சிறிது நேரம் சென்னை ரசிகர்களுக்கு வேர்துகொட்டவே ஆரம்பித்தது.

இறுதிவரை நின்ற இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்துக்கொடுத்தது. இதையடுத்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த RCB அணி 173 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி தற்போது களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த முதல் போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

More in Featured

To Top