Connect with us

பலிக்காமல் போன இந்திய அணியின் பந்துவீச்சு : Tony De Zorzi-யின் அதிரடி சதத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி..!!

Featured

பலிக்காமல் போன இந்திய அணியின் பந்துவீச்சு : Tony De Zorzi-யின் அதிரடி சதத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இதில் கெபெர்ஹாவில் உள்ள உலக புகழ் பெற்ற மைதானத்தில் நேற்று 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாய் மற்றும் ருதுராஜ் களமிறங்கினர்.

அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த திலக் வர்மாவும் 10 ரங்களில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கே.எல்.ராகுலுடன் இளம் வீரர் சாய் கைகோர்த்தார்.

ஒருபக்கம் ராகுல் நிதானமாக ஆட மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய சாய் 62 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர் சாம்சன் மற்றும் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து நீதமாக ஆடிய கேப்டன் ராகுல் அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரங்களில் வெளியேறினார்.ஒருக்கட்டத்தில் 46ஆவது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்தது.அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டோனி மற்றும் ரீசா ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்திய நிலையில் ரீசா தனது விக்கெட்டை பறிகொடுக்க டோனியுடன் rassie ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் டோனி அதிரடியில் மிரட்ட மறுபக்கம் அவருதுக்கு உறுதுணையாக rassie நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய 122 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக நிலவில் வருகிறது.

See also  பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top