Connect with us

“எப்போ அழைத்தாலும் விசாரணைக்கு வருகிறேன்” – போலீசிடம் கைப்பட கடிதம் எழுதி கொடுத்த நடிகர் மன்சூர் அலிகான்

Cinema News

“எப்போ அழைத்தாலும் விசாரணைக்கு வருகிறேன்” – போலீசிடம் கைப்பட கடிதம் எழுதி கொடுத்த நடிகர் மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷாவுக்கும் எனக்கும் உண்டான வழக்கு விசாரணைக்காக காவல்துறை எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு நடித்ததை போல் த்ரிஷாவுடனும் அப்படி நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் பேசியது இனையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து இன்று நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது . இதையடுத்து இன்று நேரில் ஆஜரான நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவுக்கும் எனக்கும் உண்டான வழக்கு விசாரணைக்காக காவல்துறை எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது :

“அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன்; த்ரிஷா அதனை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து நான் பேசவில்லை

நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால், அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்

நான் குரல் பிரச்னைக்காக நாளை தான் வருவதாக இருந்தேன். ஆனால், சமூக வலைதளங்களில் நான் தலைமறைவு, என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜர் ஆனேன்

இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன் என காவல்துறையிடம் கைப்பட கடிதம் எழுதிக்கொடுத்துள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top