Connect with us

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சென்னை காவல்துறை..!!

Featured

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சென்னை காவல்துறை..!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாலை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

சென்னையை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அருண் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் ரவுடிகளுக்கு எதிராக பல அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இந்த கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி இந்த வழக்கில் ஏ ஒன் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில், ஏ 3 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு அமரன் படம் சிறப்பாக இருந்தது - இயக்குநர் கோபி நயினார் விமர்சனம்..!!

More in Featured

To Top